பலதும் பத்தும்

எந்த நாளில் விளக்கேற்றினால் என்ன பலன்!

இந்து சமயத்தில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் முக்கியமானதாகும். இது, இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உணர்த்துகிறது. தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது சிறந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இறைவனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

ஞாயிறு, சூரிய பகவானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம், புகழ் கூடும்.

செவ்வாய், செவ்வாய் பகவான் மற்றும் துர்க்கை அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத் தடை அகலும், கடன் பிரச்சினை தீரும்.

புதன், புதன் பகவான் மற்றும் பெருமாளுக்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் விளக்கேற்றுவதால் கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவு விருத்தி ஏற்படும்.

வியாழன், குரு பகவான் மற்றும் தட்சிணாமூர்த்திக்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் விளக்கேற்றி வழிபட்டால் குரு அருள் கிடைக்கும், ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

வெள்ளி, வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மற்றும் சுக்ர பகவானுக்குரிய நாள். இந்த நாளில் தீபம் ஏற்றினால் செல்வ வளம் பெருகும், தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும், லட்சுமி அருள் கிடைக்கும்.

சனி, சனி பகவான் மற்றும் பெருமாளுக்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கிய குறைபாடு நீங்கும், சனி தோஷம் விலகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button