உலகம்

கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் வாழ்​வா​தாரம் பாதிக்கும்

கிரேட் நிக்​கோ​பார் தீவு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் மூலம் அங்​குள்ள சுற்​றுச்​சூழல் மற்​றும் உள்​ளூர் மக்​களின் வாழ்​வா​தாரம் பாதிக்கும் என்று ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் தனது ‘எக்​ஸ்’ சமூக ஊடகப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: இந்​தி​யா​வின் தென்​கோடி முனை​யான ‘இந்​திரா பாயிண்ட்’ பகு​திக்கு அண்​மை​யில் பயணம் மேற்​கொண்​டேன்.

அங்கு வாழும் பழங்​குடி​யின மக்​கள் மற்​றும் குடியேறிய​வர்​களு​டன் கலந்​துரை​யாடிய வீடியோ ஒன்றை இத்​துடன் பகிர்ந்​துள்​ளேன். நாட்​டின் பாது​காப்​பிற்கு முன்​னுரிமை அளிப்​ப​தாக இருந்​தால் ‘ஐஎன்​எஸ் பாஸ்’ தளத்தை விரி​வாக்​கம் செய்ய வேண்டும். இத்​திட்​டத்​தின் காரண​மாக 1.5 கோடி மரங்​கள் வெட்​டப்​படும் அபா​யம் உள்​ளது.

பவளப்​பாறை​கள் சேதமடைவதுடன், பழங்​குடி​யின மக்​களும்இ ராணுவப் பணி​யாளர்​களும் இடம்​பெயர நேரிடும்.

மேலும்இ பவளப்​பாறை​கள் இருக்​கும் விவரம் அதி​காரப்​பூர்வ வரைபடங்​களி​லிருந்து நீக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தத் தீவு​கள் உலகம் இது​வரை கண்​டி​ராத மிக அசா​தா​ரண​மான, நிலை​யான சுற்​றுலாத் தலமாக விளங்க தகு​தி​யானவை. அத்​தகைய இந்​தி​யா​விற்​காகவே நாம் போ​ராட வேண்​டும்​. இவ்​வாறு ராகுல்​ காந்​தி தெரிவித்​துள்​ளார்​.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button