உலகம்

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரை சந்திக்கும் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை எதிர்காலத்தில் நேரில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்றும், முக்கிய முடிவுகள் அவரிடமே உள்ளதாக நம்புவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

“நான் அவரை சந்திக்க விரும்புகிறேன். சூழ்நிலையைப் பொறுத்து ஒரு கட்டத்தில் சந்திப்பு நடைபெறலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாமல் அறிக்கைகள் மூலம் மட்டுமே செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை வளைகுடா போர் பதற்றத்திற்கு மத்தியில் டிரம்ப் வெளியிட்ட இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button