உலகம்

அணு ஆயுதங்களுக்காக புதிய ஆலை ; அதிரடி காட்டும் வடகொரியா

வடகொரியா தனது தனது அணு ஆயுத திட்டத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் அணு குண்டுகளுக்கான எரிபொருளை உற்பத்தி செய்யும் புதிய ஆலையை வடகொரியா திறந்து உள்ளது. இந்த ஆலையில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக வடகொரியா தெரிவித்து உள்ளது.

ஆனால் இந்த ஆலை எங்குள்ளது அல்லது எப்போது செயல்படத் தொடங்கியது என்பது குறித்த விவரங்கள் வெளியிடவில்லை. அந்த ஆலைக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சென்று பார்வையிட்டதாக வடகொரிய அரசு தொலைகாட்சி தெரிவித்துள்ளது.

அப்போது 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, வடகொரியாவின் ஆயுதத் தர அணுப் பொருட்கள் உற்பத்தித் திறன் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று கிம் ஜாங் உன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வட கொரியாவின் அணுசக்தி நடவடிக்கைகளைக் கண்காணிக்க அமெரிக்காவுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதாக தென் கொரியா தெரிவித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button