பலதும் பத்தும்

33 ஆண்டுகளுக்கு முன்னதாக பதிவான வழக்கில் 84 வயது முதியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!

பீகார் மாநிலத்தில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில், 84 வயதான முதியவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த தீப் ராய் என்பவருக்கு எதிராக 1992ஆம் ஆண்டு கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கிராமத்தில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதையடுத்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், காவல்துறை 1993ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சிலர் விசாரணை நிறைவடையும் முன்பே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், தீப் ராயை கலவரம், ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல் மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றங்களில் குற்றவாளி என அறிவித்தது. தற்போது 84 வயதாகும் தீப் ராய்க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குறித்த சம்பவம் நடைபெற்ற 33 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, நீதித்துறை தாமதம் குறித்த விவாதங்களையும், அதிர்ப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் விமர்ச்சித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button