கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம் இன்று

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192 ஆவது வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
கொடியேற்றத்துக்கு முன்னதாக இன்றையதினம் தமிழ், சிங்கள மொழிகளில் காலை 6 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். கொடியேற்றத்தைத் தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி
வரை தினந்தோறும் நவநாள் வழிபாடுகள் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும்.
இதையடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் வேஸ்பர்ஸ் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்படும்.
திருவிழா தினமான 13 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
திருவிழா பாடல் திருப்பலிகள் அன்றையதினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகையின்
தலைமையில் சிங்கள மொழியிலும், நண்பகல் 12 மணிக்கு கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர் ஜே.டி. அன்தனி ஆண்டகையின் தலைமையில் ஆங்கில மொழியிலும்ஒப்புக்கொடுக்கப்படும்.
புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் அன்றையதினம் (13 ஆம் திகதி) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து நற்கருணை ஆசீர்வாதம்
மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் நிறைவுபெறும்.
![]()