முச்சந்தி

அனலைதீவில் இ.போ.ச.வுக்குச் சொந்தமான பஸ்ஸை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

அனலைதீவுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று கடற்படையின் சிறப்பு படகில் எடுத்து செல்லப்பட்டு , அப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள கடல் கடந்த தீவுகளில் ஒன்றான அனலைதீவு பகுதி மக்களின் போக்குவரத்திற்காக பேருந்து ஒன்றினை வழங்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர் .

அதன் அடிப்படையில் , இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடற்படையினரின் விசேட படகு மூலம் அனலைதீவு பகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து, அனலைதீவுக்குள் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளதால், அப்பகுதி மக்களின் நாளாந்த பயணங்கள் இலகுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button