இலங்கை

நயினாதீவு படகு விபத்தில் அதிபர் உயிரிழப்பு : படகோட்டிக்கு நீதிமன்றின் உத்தரவு

யாழ்ப்பாணம் – நயினாதீவில் படகில் பயணிக்கும் போது கடலில் தவறி விழுந்து நயினாதீவு பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் படகோட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி  படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடற்சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலினுள் தவறி விழுந்து நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய அதிபரான நடராசா மயூரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை காவல்துறையினர் படகோட்டியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button