இலங்கை

நாட்டில் கருத்துக்களும் செயற்பாடுகளும் வெவ்வேறு பக்கம் இருக்கின்றனவா?கேள்வி எழுப்பிய ஸ்ரீநேசன் எம்.பி!

எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? என சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றன. ஏனெனில் பொதுவாக பார்க்கின்ற பொழுது சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப கருத்துக்கள் இருக்கின்றன. ஒரே நாடு ஒரே சட்டம் என சொல்லுகின்றார்கள். சட்டவாட்சி நடைபெறுகின்றது சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமம் என்ற கருத்துக்கள் ஒரு பக்கமாக சொல்லப்பட்டு கொண்டிருக்கின்றன. அவை சில நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதேவேளை எமது அரசியல் யாப்பை பொறுத்தவரையில் அரச மதம் பௌத்த மதம் என சொல்லப்படுகின்றது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை என்ற கருத்தும் நிலவுகின்றது. அதேபோன்று 1956 ஆம் ஆண்டு காலத்தில் சிங்களம் மட்டும் அரச கரும மொழி என்ற அடிப்படையில் மொழி உரிமைகள் கொடுக்கப்பட்டிருந்தன. தற்போது சிங்களமும் தமிழும் அரச கரும மொழி என்ற விடயம் யாப்பிலும் இருக்கின்றது. ஆனால் நடைமுறையில் மொழி முன்னுரிமை மத முன்னுரிமை என்று அது இருக்கின்றன.

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

அரசியல் யாப்பு ரீதியாகவும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கின்றது. இப்படி இருக்கின்ற பொழுது அண்மையில் நடைபெறுகின்ற சில சம்பவங்கள் மத குருமார்கள் என கையெடுத்து வழங்கப்படுகின்றவர்கள், காலில் விழுந்து ஆசீர்வாதம் கொடுக்கின்றவர்கள் மதத் தலைவர்கள் இப்போது சட்டத்தை மீறி செயற்படுகின்ற செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.

 

 

எல்லா மத குருமார்களிலும் இதில் அடங்கவில்லை சட்டத்தை மீறி செயல்படுகின்ற மதகுருமார் பற்றி நாம் கருத்து தெரிவிக்க வேண்டும். அண்மையில் பார்த்தால் தாய்லாந்தில் இருந்து 22 மதகுருமார் பௌத்த தேரர்கள் போதைப்பொருள் கடத்தியதாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். அதேபோன்று அண்மையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு ஒருவர் நீதிமன்றத்தின் முன்னிலையாக்கப்பட்டு அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார் அது நீதிமன்ற நடவடிக்கையாகும்.

 

 

இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி பேசியதாக நாம் ஊடகங்கள் வாயிலாக பெறப்பட்ட தகவல் பௌத்த சாசனம் பௌத்த குருமார்களுக்கு என ஒரு விசேடமான நீதிக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் அவர்கள் விசாரிப்பதற்கு என அது அமைக்கப்பட வேண்டும் என அவர் சொல்லி இருக்கின்றார். சட்டவாட்சி என்பது சட்டத்தின் முன் யாவரும் சமம் என சொல்லுகின்றனர். அதுதான் சட்டவாட்சியின் ஒரு அடிப்படை கோட்பாடாகும். அவ்வாறான நிலையில் மதகுருமார்களுக்கான அதுவும் குறிப்பாக பௌத்த மத குருமார்கள் என நீதி கட்டமைப்பை உருவாக்கும் பொழுது சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமம் என்ற சொல்லாமல் பொதுவான நீதிமன்றங்கள் இல்லாது ஒரு சிறப்பு நீதிமன்றங்கள் அவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்ற நிலைமை காணப்படும் நிலைமை ஒரு பாரபட்சமான சூழலை சட்டவாட்சியில் ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்தும்.

 

 

ஏனெனில் ஏற்கனவே நாங்கள் இனரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக, அரசியல்வாதிகளால் பிடிக்கப்பட்டு நாங்கள் அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றோம். இவ்வாறான நிலையில் இப்போது பௌத்த மத விசாரணைகளுக்கென ஒரு விசேடமான ஒரு நீதிக் கட்டமைப்பை உருவாக்குகின்ற செயற்பாடு என்பது டயசி கூறிய சட்டவாக்கக் கோட்பாடு முரணாக அமையும். அது மாத்திரமன்றி சாதாரணமாக குற்றவாளிகள் ஒரு வகையான நீதிமன்றத்திலும் விசேடமானவர்கள் விசேடமாக ஆக்கப்படுகின்ற நீதிமன்றத்திலும் கொண்டுவரப்படுகின்ற போது ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்கின்ற சட்டவாட்சி என்பது பேணப்படக்கூடிய சூழ்நிலை காணப்பட மாட்டாது.

 

ஒரே நாடு ஒரே சட்டம் சட்டத்தின் முன் யாவரும் சமம் பலம் பணத்தை வைத்துக் கொண்டு ஒருவரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது அரசியல் தலைவர்களாக ஜனாதிபதியாக இருந்தாலும் சட்டத்தின் முன் அவர்கள் சட்டத்தின் உட்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்ற கருத்தினை ஜனாதிபதியாக ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

 

அவற்றை நாங்கள் வரவேற்கின்றோம். மதத்தலைவர்களாக இருந்தாலும் சரி இந்து பௌத்தம் இஸ்லாமிய கிறிஸ்தவம் எந்த மத தலைவர்கள்hக இருந்தாலும் குற்றம் புரிந்தால் சட்டத்தை முன்னிலையில் அவர்கள் சமமாக பார்க்கப்பட வேண்டும். சில அடிப்படை வாதிகள் சொல்லுகின்றார்கள் தங்களுடைய மதத்தை அவமதிப்பதற்காக சில அரசு சார்பற்ற நிறுவனங்கள் சோதனை செய்து குற்றம் இழைக்காத மதகுருமார்களை நீதிமன்றத்தில் நிறுத்துகின்றார்கள் என்ற வாதத்தை முன்வைக்கின்றார்கள். அவ்வாறனின் குற்றம் இழைத்த மத குருமார்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு கள்ளத்தனமான வழியை திறந்து விடுகின்றார்களா என்ற எண்ணம் எமக்கு தோணுகின்றது.

 

 

இது இவ்வாறு அமைந்தாலும் சட்டவாட்சி நடைபெறுகின்ற ஜனநாயக நாட்டிலே பல்லின மக்கள் வாழுகின்ற நாட்டிலேயே சகலருக்கும் சட்டம் பொதுவாக இருக்க வேண்டும். சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமம் சட்டப்படி இவர் தண்டிக்கப்படக்கூடாது சட்டத்தின் மூலமாக சமமான பாதுகாப்பு அனைவருக்கும் இருக்கின்றது என்று சொன்னால் மதகுருமார்கள் அரசியல் தலைவர்கள் பணம் படைத்தவர்கள் அதிகார சக்தி உள்ளவர்கள் பேதம் பார்த்து சட்டம் உங்கள் நடைமுறைப்படுத்தப்படும் ஆக இருந்தால் விசாரணை நடக்குமாக இருந்தால் அதைத்தான் சொல்லுவார்கள் பாரபட்சம் டிஸ்கிரிமினேஷன் என சொல்வார்கள்.

 

 

ஆகவே நாம் எதிர்பார்ப்பது இடதுசார்புடைய அரசாங்கத்தில் முற்போக்காண சட்டங்கள் இருக்க வேண்டும், முற்போக்கான திட்டங்கள் இருக்கவேண்டும், மகத்துவக்கான அணுகுமுறைகள் இருக்க வேண்டும், என நாம் எதிர்பார்க்கின்றோம். மாறாக குருமார்களை குpற்காக பௌத்த குருமார்களை விசாரிப்பதற்கு நீதிக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் சட்டவாட்சி கோட்பாடு உடைத்தெறியப்படும் பாரபட்சமான ஒரு நீதி பரிபாலனத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாக இருக்கும். எனவே இந்த விடயத்தை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். மத்தத் தலைவர்கள் குற்றம் புரிய கூடாது குற்றம் புரிந்தால் அவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றத்தின் மூலமாக விசாரணைகள் மூலமாக அவர்கள் விசாரிக்கப்படுவதுக்கும் நிரூபிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.

 

 

பாரபட்சமான கட்டமைப்புகள் பாரபட்சமான சட்டங்கள் பாரபட்சமான முன்னுரிமைகள் வழங்கப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் அவ்வாறு பார்க்கின்றபோது இங்கு பிரிவினைகள் ஏற்படும் ஒரே சட்டம் ஒரே திட்டம் ஒரே பரிமாற்றமா இருக்குமாக இருந்தால் ஒரு சாராருக்கு ஒரு சட்டம் மறுசாராருக்கு இன்னுமொரு சட்டமாக இருந்தால் இந்த நாட்டில் இரண்டு வகையான சட்டங்களும் இரண்டு வகையான தேசங்கள் இருப்பதும் இரண்டு வகையான மக்கள் பிரிந்து செல்வதற்குரிய வழியை கூறுவதாகவும் இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

 

 

 

ஜேவிபி இனர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்கள். 2018 ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட மாகாண சபை புதிய தேர்தல் மூலமாக இன்னும் மக்கள் பிரதிநிதிகளை கொண்டு வரவில்லை. மாகாண சபை என்பது வெறுமனே தாங்கள் நினைத்தால் மாகாண சபையை கொண்டு வரலாம் இல்லாத விட்டால் ஆளுநரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரலாம் என்ற நிலையைப்பாட்டில் இவர்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே ஜனநாயகத்தை மதிக்கின்றவர்களாக இருந்தால் சிறுபான்மை மக்களுக்கு ஒரு தீர்வு என்று சொல்லுகின்ற 13 வது திருத்தச் சட்டத்தை சொல்லுகின்றார்கள். ஆனால் 13 லது திருத்ததில் மாகாண சபைகளுக்கு அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை. எனினும் மாகாண சபையை இயங்க விடாமல் தடுப்பது என்பது ஜனநாயகத்துக்கு மாறான ஒரு செயற்பாடாக அமைந்திருக்கிறது. இந்த வருடத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் பழைய தேர்தல் முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என 43 கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுத்திருக்கின்றனர். எனவே இந்த தேர்தலை அரசாங்கம் இழுத்தடிக்கின்ற சாக்கு போக்குகள் சொல்லுகின்றதாக அவர்களது செயல்பாடு காணப்படுகின்றது.

 

 

நாங்கள் கேட்டுக் கொள்வது மாகாண சபை தேர்தலில் நிச்சயமாக இவ்வருடத்திற்குள் நடத்த வேண்டும் 2018 இல் இருந்து இயங்காமல் இருக்கின்ற மாகாண சபை பார்க்க போனால் 2018 தேர்தல் நடந்திருந்தால் 2023 அடுத்த தேர்தல் நடைபெற்றிருக்கும் அதை கடந்து 2028 இல் அடுத்த தேர்தல் நடைபெற்றது இரண்டு தேர்தல் நடாத்த வேண்டிய காலகட்டம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

எனவே ஜேவிபி யின் செயலாளர் இந்த வருடத்திற்கும் மாகாண சபை தேர்தல் நடைபெறாது எனக தெரிவித்திருக்கின்றார். அரசாங்கம் இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. 43 கட்சிகள் தேர்தலில் நடத்துமாறு கேட்டுக் கேட்டிருக்கின்றதனால் தேர்தலை நடாத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டிருக்கின்றது. இல்லை என அரசாங்கம் இழுத்தடிப்பு செய்யுமாக இருந்தால் அரசாங்கம் தேர்தலில் கண்டு பயமடைகின்றதா என்று தான் மக்கள் பேசக்கூடிய நிலைமை இருக்கும்

 

 

 

ஜனாதிபதி தேர்தலில் 56 லட்சம் வாக்குகளை அனுரா குமார திசநாயக்கா அவர்கள் பெற்றிருந்தார். பாராளுமன்றத் தேர்தலில் 68 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 46 இலட்சம் வாக்குகளை பெற்றிருக்கின்றார்கள். ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது கணிசமான வீழ்ச்சி உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஏற்பட்டிருக்கின்றது இவ்வாறான புகழ்ச்சியின் காரணமாக தான் மாகாண சபை தேர்தலை சந்திப்பதற்கு தேசிய மக்கள் சக்தியினர் அஞ்சுகின்றார்களோ என்ற சந்தேகம் மக்கள் பேச புறப்பட்டிருக்கிறார்கள்.

 

 

97 விதமான தொழிற்சாலைகள் வடக்கு கிழக்குக்கு வெளியேதான் இருக்கின்றன 3 தசத்துக்கும் சற்று அதிகமான தொழிற்சாலைகள்தான் வடக்கு கிழக்கில் இருக்கின்றன. எனவே வடக்கு கிழக்கில் தொழில் வாய்ப்பை பெறுவதற்கு இளைஞர்களும் யுவதிகள் மிகவும் கஷ்டப்படுகின்ற சூ+ழ்நிலை இருக்கின்றது. இதனால் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று அடிமைத்தனமாக அவர்கள் வேலை செய்கின்றார்கள். ஆகவே அபிவிருத்தி நடந்திருக்கின்றதா என்று பார்த்தால் புதிதாக ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கின்றதா அல்லது அமைக்கப்படுவதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் நடந்திருக்கின்றதா என்று பார்க்க வேண்டும் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை.

 

 

முந்தானை ஆற்றுத்திட்டம் ஆரம்பிக்கப்பட போகின்றது என்றால் அது இன்னும் இன்னும் நடைபெறவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்ககரைப் பகுதியையும், எழுவாங்கரைப் பகுதியையும் ஊடறுத்து செல்லும் வாவி ஊடகாக இன்னும் மக்கள் சில பகுதிகளுடாக படகுச் சேவையினூடாகவே பயணம் செய்கின்றார்கள். எனவே இந்த அரசாங்கம் வந்ததற்கு பின்னர் கிழக்கில் ஒரு பாலத்தையாவது நிர்மாணிக்க பார்ப்பதற்கு ஆரம்ப வேலைகளைகூட செய்யவில்லை தொழிற்சாலைகள் இல்லை நீர்ப்பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை வீடமைப்புத் திட்டங்கள் கூட மெதுவாக நடைபெறுகின்றன. ஆகவே இந்த ஒன்றரை வருட காலத்தில் குறிப்பிட்டு கூறக்கூடிய அளவுக்கு பெரியளவு திட்டங்கள் நடைபெறவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button