உலகம்
போர் நிறுத்தம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்த சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்காலிக போர் நிறுத்தத்திற்கான ஒரு உத்தேச திட்டத்திற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், டிரம்பின் ஒப்புதல் கிடைக்கும் வரை போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒரு உத்தேச திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த 60 நாள் காலப்பகுதியில் ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் தங்களது முன்னைய உயர்விலிருந்து விலகி சரிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]()