உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் அதிகரித்த பலி எண்ணிக்கை

இஸ்ரேலில் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக சிறைபிடித்து சென்றனர்.

அவர்களை மீட்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். பலர் புலம்பெயர்ந்து வேறிடங்களுக்கு தப்பி சென்றனர். இந்த சூழலில், 2025-ம் ஆண்டு அக்டோபரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

எனினும், தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை. இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பலியானோர் எண்ணிக்கை 72,819 ஆக உயர்ந்து உள்ளது. 1 லட்சத்து 72 ஆயிரத்து 894 பேர் காயமடைந்து உள்ளனர்.

காசா முனை பகுதியில் கடந்த 48 மணிநேரத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று, 2025-ம் ஆண்டு அக்டோபரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து 922 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

தவிர 2,786 பேர் காயமடைந்து உள்ளனர். இதில், 781 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. பலரின் உடல்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளன. ஆனால், அவற்றை அவசரகால பணியாளர்கள் மற்றும் மீட்பு குழுவினரால் மீட்க முடியாத சூழல் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button