உலகம்

கனடாவில் இந்திய இளம் பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்; தீவிரமாகும் விசாரணை

கனடாவில் பட்டப்படிப்பு படித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 22 வயது மாணவி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சாத் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் விதி கல்பேஷ்பாய் மேஹானி என்பவர் கனடாவில் 4 ஆண்டுகளாக தங்கி பட்டப்படிப்பு படித்து வந்தார்.

படிப்புக்கு இடையே பகுதிநேர வேலையையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கனடாவின் நயாகரா பகுதியில் கத்திக்குத்து தாக்குதலில் மேஹானி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக கனடா பொலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, சந்தேக நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button