இலங்கை

அரசை விரட்டியடிக்கும் தேவை மக்களுக்கு இல்லை; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

மக்களுக்குப் பொறுப்புக் கூறும் மக்களுக்கான தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்களுக்கு எவ்விதத் தேவையும் இல்லை. அதற்காகக் கனவு காண்பவர்கள் திருடர்களும், ஊழல்வாதிகளும், போதைப்பொருள் வர்த்தகர்களுமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை, நில்வலா கங்கையை அண்டிய உப்புநீர்த் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 – 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று புதன்கிழமை முற்பகல் மாலிம்பட பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.இதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு குறுகிய காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதேஅரசாங்கத்தின் நிலைப்பாடாகும். மக்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் அதேவேளை, படிப்படியாக அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, தேசியபொருளாதாரத்தில் அவர்களைப் பங்காளிகளாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, சிறு வர்த்தகர்களுக்குக் கடனுதவி வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சின் கீழ்90,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ”சமூக சக்தி” வேலைத்திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டுக்கு 25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வரலாற்றில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் முக்கிய பொருளாதாரக் காரணிகள் பலவற்றில்தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதாரத் தரவுகளைப் போலவே மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வளவு தூரம் இலகுவாகிறது என்பதைக்கொண்டே நாட்டின் பொருளாதார வளர்ச்சி பிரதிபலிக்கிறது .

மக்களுக்குப் பொறுப்புக் கூறும் மக்களுக்கான தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்களுக்கு எவ்விதத் தேவையும் இல்லை அதற்காகக் கனவு காண்பவர்கள் திருடர்களும், ஊழல்வாதிகளும், போதைப்பொருள் வர்த்தகர்களுமே ஆவர்.

அவர்கள் செய்த ஊழல், மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தின் முன்னிலையில்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, அவர்கள் பதற்றமடைந்து பல்வேறு பொய்ப் பிரசாரங்களை பரப்பி வருகின்றனர் எனினும் தற்போதைய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையைவென்று மேலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

மாத்தறை வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும், பொருளாதார ரீதியாகப்பின்தங்கியுள்ள மக்களுக்கு நிரந்தர வருமான வழியை ஏற்படுத்தி, உயர்தர வாழ்க்கைத்தரத்தைக்

கட்டியெழுப்புவதற்கும், மாத்தறை மாவட்டத்தைப் பரந்தளவிலான அபிவிருத்திக்குஉட்படுத்துவதற்கும் அரசாங்கம் அதிக வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய மிக முக்கியமான வழி கல்வி என்பதை உணர்ந்துள்ள அரசாங்கம், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளைநவீனமயமாக்குவதுடன், 50 தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்து பரந்தளவிலான கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button