இலங்கை

சட்டச் சிக்கல்களை ஒரே நாளில் திருத்த முடியும்;மாகாண சபைத் தேர்தலுக்கு அஞ்சுகின்றது அரசு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமல்ல, சட்டச் சிக்கல்களே காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்த கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் முற்றாக நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் சாகர காரியவசம் மேலும் தெரிவித்ததாவது,

“சட்டச் சிக்கல்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, தேர்தலைத் தள்ளிப்போடவே தற்போதைய அரசு முயற்சிக்கின்றது. கடந்த காலங்களில் இதே சட்டச் சிக்கல்களைப் பேசிக்கொண்டே தேர்தல்கள் முடக்கப்பட்டன.

தற்போது மூன்றிலிரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசுக்கு, அந்தச் சட்டச் சிக்கல்களை ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் திருத்த முடியும். அவ்வாறு செய்யாமல் காலம் தாழ்த்துவது, தற்போதைய அரசியல் சூழலில் தேர்தலை எதிர்கொள்ள அரசு அஞ்சுவதையே காட்டுகின்றது.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button