இலங்கை

இராணுவக் குறைப்பை கடுமையாக விமர்சித்த சரத் பொன்சேக்கா…

இராணுவத்தை குறைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாக பீல்ட்மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அந்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசாங்கத்துக்கு சார்பான கருத்துக்களை தெரிவித்து வந்த பீல்ட்மார்ச்ல் சரத் பொன்சேக்கா தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுக் குறைப்பை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

தற்போதைய இராணுவத் தளபதி நான் இருக்கும் போது மேஜர் தரத்தில் இருந்தவர். பிரதி தளபதி கெப்டனாக இருந்தவர்.

நான் இருக்கும் 200,000 பேர் இராணுவத்தில் இருந்தனர். இப்போது 130,000 பேரே இருக்கின்றனர்.

அரசாங்கத்தின் இராணுவக் கொள்கை

எனக்குக் கிடைத்த தகவலின்படி தற்போதும் இராணுவம் அப்படித்தான் இருக்கிறது. இனிவரும் காலங்களில் இந்த இராணுவம் மேலும் குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

நம் நாட்டுக்கு அது பொருத்தமற்றது. நான் அதை பொருத்தமானது என்று நினைக்கவில்லை. எனது அனுபவத்தின்படி நம் நாடு எப்போதுமே பாதுகாப்பைக் தளர்த்தக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.

கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்களைக் கொண்ட ஒரு நாடு. ஒரு முறை அல்ல மூன்று முறை தெற்கிலும் வடக்கிலும் அனைத்துப் பகுதிகளிலும் பயங்கரவாதம் தலைதூக்கியிருந்தது.

அத்தோடு வெளிப்புறத் தாக்கங்களும் ஏற்படலாம். கடந்த காலத்தில் நமக்கு அப்படியான பிரச்சினைகள் வந்துள்ளன.

அதனால் பாதுகாப்பை எவ்வேளையிலும் தளர்த்தாமல் முப்படைகளையும் வலுவாக வைத்திருப்பதுடன் புலனாய்வுப் பிரிவினரையும் மிகவும் வலுவாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

வலு இழக்கப்பட்ட இராணுவம்

இப்போது இருக்கும் இராணுவத்தைப் பார்த்தால் நான் இருந்த காலத்தில் இருந்த இராணுவம் அல்ல இப்போது இருப்பது.

யுத்தம் முடியும் போது மிகவும் வலுவான அனுபவமிக்க எந்தவொரு போரிலும் ஈடுபடக்கூடிய ஒரு இராணுவம் நமக்கு இருந்தது.

அந்த இராணுவத்தில் இருந்தவர்களில் இப்போது சுமார் 20 வீதம் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். மற்றவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார்கள்.

இராணுவக் குறைப்பை கடுமையாக விமர்சித்த சரத் பொன்சேக்கா... | Sarath Fonseka Anura Kumara Slarmy

அக்காலத்தில் போர்க்களத்தில் இருந்த சார்ஜன்ட்கள் கோப்ரல்கள் போன்ற அனுபவமிக்கவர்கள் அனைவரும் இப்போது போய்விட்டார்கள். அதனால் ஒரு இராணுவம் என்பது யுத்தம் தொடங்கிய பின்னர் உருவாக்கக்கூடிய ஒன்றல்ல.

அந்த பலவீனத்தின் காரணமாகத்தான் இந்த யுத்தம் இத்தனை வருடங்கள் நீடித்தது. யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 24 மணித்தியாலங்களும் எந்தவொரு பணிக்கும் தயாராக இருக்கும் வகையில் இராணுவம் இருக்க வேண்டும்.

உலகின் வளர்ந்த நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது என குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button