இந்தியா

கடுங்குற்றங்களில் ஈடுபட்டால் கடும் தண்டனை

சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், பொலிஸ் உயரதிகாரிகள், தமிழக பொலிஸ் இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப்பதிந்து விரைவாக விசாரித்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார்.

பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். குற்றசெயல்களில் ஈடுபட திட்டமிடுவோரை தடுக்கும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button