இலங்கை

இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பல தகவல்கள் அம்பலமாகி வருகின்றன.

அந்த வகையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் நெருங்கிய சகாவாக முன்னதாக செயற்பட்ட, அசத் மௌலானா வழங்கிய 95 பக்கங்கள் அடங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

இரகசிய குறியீட்டு பெயர்

 

இராணுவப் புலனாய்வு பிரிவினர் சட்டவிரோதமான முறையில் முன்னெடுத்த பல குற்றச்செயல்கள் தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள் | Suresh Salays Report

இராணுவப்புலனாய்வு பிரிவு வட்டாரத்தில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ”அல்பா” என்ற இரகசிய குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டதாகவும் பிள்ளையான் பன்னா என அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்று ஏற்றுக்கொண்டபோது சாட்சியங்களை மறைக்குமாறும், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நபர்களின் சடலங்களை வேறு இடத்திற்கு மாற்று மாறும் ஆயுதங்களை புதைக்குமாறும் சுரேஷ் சாலே பணிப்புரை வழங்கினார் என அசாத் மௌலானா குறித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையை அதிரவைக்கும் வகையிலான புதிய தகவல்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

அசாத் மௌலானாவின் 95 பக்க வாக்குமூலம்

அசாத் மௌலானாவின் 95 பக்க வாக்குமூலம் பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து, சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர் அசாத் மௌலானாவிடம் பதிவு செய்த 95 பக்கங்களைக் கொண்ட வாக்குமூலம் இந்த விசாரணையில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயே இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என நீதிமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள் | Suresh Salays Report

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நிதி மற்றும் ஆயுத விநியோகம் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு முதல் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயல்பாடுகளுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவே நிதி வழங்கியுள்ளது.

ஒவ்வொரு முறையும் சுமார் 25 இலட்சம் ரூபாய் வரையான தொகையை அசாத் மௌலானாவே கையெழுத்திட்டுப் பெற்றுள்ளார்.

சஹ்ரானின் குழுவினரை பிணையில் எடுக்கும் முயற்சி

 

2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தொடர் இலக்கங்கள் அழிக்கப்பட்ட 41 டி-56 ரக துப்பாக்கிகள், 9 மைக்ரோ பிஸ்டல்கள் மற்றும் வெடிபொருட்களை சுரேஷ் சலே ஒருங்கிணைத்து வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2017-ல் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் குழுவினரைப் பிணையில் எடுப்பதற்காக, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நிதியிலிருந்து வழக்கறிஞர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள் | Suresh Salays Report

புலனாய்வுப் பிரிவினர் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள விசேட குறியீட்டுப் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச: ‘ஆல்பா’ (Alpha), சுரேஷ் சலே: ‘சமி’ (Sami) அல்லது ‘கனல்’, பிள்ளையான்: ‘பன்னா’, கபில ஹெந்தவித்தாரண: ‘சுமித்’, என பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ‘நிழல் அரசாங்க’ (Deep State) கட்டமைப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாகப் பல அரசியல் படுகொலைகளையும் கடத்தல்களையும் முன்னெடுத்துள்ளதாக மௌலானா குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை, பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் கொலை போன்ற பல சம்பவங்கள் இந்தப் பட்டியலில் அடங்குகின்றன.

மேலும், அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் நடவடிக்கைகள் சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் நேரடி வழிகாட்டலில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சாலே உடனான இரகசிய சந்திப்பு

 

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, சுரேஷ் சாலே தன்னைச் சந்திக்க அழைத்ததாக மௌலானா கூறியுள்ளார்.

அப்போது, “ஆதாரங்கள் எதையும் விட்டுவைக்க வேண்டாம், ஆயுதங்களை மறைத்துவிடுங்கள், புதைக்கப்பட்ட உடல்களை எடுத்து இடமாற்றம் செய்துவிடுங்கள்” என்று சலே உத்தரவிட்டதாக அவர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, தனக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி மருத்துவப் பரிசோதனைகளைக் கோரியுள்ளார்.

எனினும், அவரது கைத்தொலைபேசி மற்றும் கணினிகளுக்கான கடவுச்சொற்களை வழங்க அவர் மறுத்து வருவதால், டிஜிட்டல் தடயவியல் ஆய்வுகள் தாமதமாகி வருவதாகவும் இணைய ஊடகமொன்றில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button