இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம்   மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் தலைமையில் அரியாலையில் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், அரியாலை பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தை, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்வில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான, க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன், மாநகர சபை உறுப்பினர்களான, சு.கபிலன், ச.பிரதீபன் உள்ளிட்ட யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர், கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை தேசியத் தலைவரின் உடல் புடைக்கப்பட்ட இடம் தொடர்பாக பீல்ட் மார்சன் சரத்பொன்சேகா அண்மையில் ஊடகமொன்றுக்கு தெரிவித்த கருத்து தொடர்பாக இன்று யாழில் ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.

இதேவேளை இன்று வவுனியா, களுகுன்னாமடு அலகல்ல வீதியானது காப்பற்ற இடப்பட்டு, புணரரமக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 42 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதி அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button