உலகம்

இங்கிலாந்து பழைய மருத்துவமனை ஒன்றில் மனித எலும்புக்கூடுகள்

இங்கிலாந்து பழைய மருத்துவமனை வளாகம் ஒன்றில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஒரு தொகை மனித உடல்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த எலும்புக்கூடுகள் வேல்ஸின் செரெடிகிஷன் (Ceredigion) பகுதியில் உள்ள பழைய ‘கார்டிகன் மெமோரியல் மருத்துவமனை’ வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த நிலத்தை தற்போது ‘வேல்ஸ் அண்ட் வெஸ்ட் ஹவுசிங் அசோசியேஷன்’ (WWHA) என்ற நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. தொல்பொருள் ஆய்வு அறிக்கையின்படி, அங்கு மொத்தம் 38 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புகள் அடங்குகின்றன. எலும்புக்கூடுகள் பெரும்பாலும் சிதைந்த நிலையிலும், உடலின் பாகங்கள் தனித்தனியாகப் பிரிந்த நிலையிலும் காணப்படுகின்றன.

இருப்பினும், அங்குள்ள ஐந்து கல்லறைகளில் சவப்பெட்டிகளின் எச்சங்கள் இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை அங்கு முன்பு இருந்த ஒரு தேவாலயத்தின் வடக்கு பகுதியில் இந்த எச்சங்கள் கிடைத்துள்ளதால், இது 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏழை எளிய மக்களுக்கான (Pauper’s cemetery) பொது மயானமாக இருந்திருக்கலாம் என்றும் அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button