உலகம்

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட சேதம் ; புதிய அறிக்கை வெளியீடு

அமெரிக்கா “ஆபரேஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் ஈரான் மீது நடத்திய ஆறு வார இராணுவ நடவடிக்கையில், 42 விமானங்களை இழந்ததாக அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

போரின் போது அமெரிக்காவின் பல போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் ஈரான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இழப்புகளின் பட்டியலில் 4 F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், ஒரு F-35A லைட்னிங்-2 போர் விமானம், ஒரு A-10 தண்டர்போல்ட் தாக்குதல் விமானம் ஆகியவை அடங்குகின்றன.

மேலும் 7 KC-135 ஸ்ட்ராடோடேங்கர் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், ஒரு E-3 சென்ட்ரி கண்காணிப்பு விமானம், 2 MC-130J கமாண்டோ சிறப்பு நடவடிக்கை விமானங்கள், ஒரு HH-60W ஜாலி கிரீன் ஹெலிகாப்டர் ஆகியவையும் சேதமடைந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இதனுடன் 24 MQ-9 ரீப்பர் டிரோன்கள் மற்றும் ஒரு MQ-4C டிரைட்டன் டிரோனும் இழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்புகள் குறித்து அமெரிக்க அதிகாரப்பூர்வ தரப்பில் மேலதிக விளக்கம் வெளியாகவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button