இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலேவின் விடுதலையே உண்மையான போர் வெற்றி..! உதய கம்மன்பில கடும் எச்சரிக்கை

தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் ஆகிய இருவரும் இந்த இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நிகழ்விற்கு வந்திருந்தால், அதுவே நீங்கள் உண்மையாகவே இராணுவ வீரர்களை நினைவுகூருவதாக அமைந்திருக்கும் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இராணுவ வீரர்களுக்கு உண்மையாகவே கௌரவம் செலுத்த ஜனாதிபதிக்குத் தேவைப்பாடு இருக்குமாயின், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகிய இருவரை முன்னிறுத்தி பிரிவினைவாதிகளைத் திருத்தியமைப்பதற்காக முன்னெடுக்கப்படும் இந்த இராணுவ வீரர்களின் வேட்டையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

வடகிழக்கு எங்கும் நேற்றைய தினம் விடுதலைப் புலிகளின் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டதை நாம் கண்டோம். அன்று வடகிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் நினைவேந்தல்கள், இன்று இலங்கை முழுவதிலும் உள்ள ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளன.

இவ்வாறான பலவீனமான, முதுகெலும்பற்ற ஒரு தலைவரின் கீழ் மாத்திரமே ஒரு நாட்டுக்குள் பயங்கரவாதிகளைப் பகிரங்கமாகவும் சுதந்திரமாகவும் நினைவுகூர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button