இலங்கை

அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஜே .வி.பி.யினரும் பயங்கரவாதிகளே

அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. அந்தவகையில் ஜே .வி.பி.யினரும் பயங்கரவாதிகளே என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

கடந்த முறை கடும் வலியுறுத்தலின் பின்னரே ஜனாதிபதி இராணுவ வீரர்கள் தினத்தில் கலந்து கொண்டார். அவ்வாறான தன்மை தான் இன்றும் காணப்படுகிறது. தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை பெருமையுடன் கொண்டாட வேண்டும்.

அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள்.இதில் ஜே.வி.பி.யை மாத்திரம் தவிர்க்க முடியாது. அனைவரும் பயங்கரவாதிகளே. அவர்களும் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை அழித்தார்கள்.

யுத்தத்தால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். 1971,1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் கவலைக்குரியன. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காணவேண்டும்.

தேசிய இராணுவ வீரர்கள் தினத்தில் கலந்து கொள்வதற்கு இம்முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காகவே தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button