இலங்கை

யுத்த வீரர்கள் நினைவிடத்திற்கு சென்ற விமல் வீரவங்சவிற்கு நேர்ந்த கதி!

பாராளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள யுத்த வீரர்கள் நினைவிடத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக சென்ற தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவிற்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவங்ச மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட குழுவினர், மனிதாபிமான நடவடிக்கையின் போதுயுத்த வீரர்களை நினைவுகூருவதற்காக (18) அங்கு சென்றிருந்தனர்.

எவ்வாறாயினும், பாதுகாப்புப் படை அதிகாரிகள் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினரை நினைவிடத்திற்கு அருகில் சென்று மலரஞ்சலி செலுத்த அனுமதிக்காததால் அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டது.

அந்தச் சந்தர்ப்பத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் தொலைபேசி அழைப்பு ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், எவருக்கும் யுத்த வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் விமல் வீரவங்சவிற்கும் இடையே கடுமையான வார்த்தை பரிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பொலிஸ் அதிகாரிகளைத் தள்ளிவிட்டுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முயன்றபோது விமல் வீரவங்ச தரையில் விழும் காட்சி ‘அத தெரண’ கெமராவில் பதிவாகியிருந்தது.

இருப்பினும், அந்த இடத்தில் இருந்த இருவரைப் பொலிஸார் கைது செய்து பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்றியதை அடுத்து, விமல் வீரவங்சவும் அந்த ஜீப் வண்டியில் ஏறியுள்ளார்.

அதன் பின்னர், கைது செய்யப்பட்ட அந்த இருவரையும் விடுவிப்பதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button