பலதும் பத்தும்

பிரித்தானியாவில் பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறை

பிரித்தானியாவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சட்டத்தை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அதற்காக பெற்றோர்களும் கடுமையான சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் வகையில் புதிய நீதித்துறை சீர்திருத்தங்களை பிரித்தானியா அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

இந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ள பிரித்தானிய நீதித்துறை அமைச்சர் டேவிட் லாம்மி (David Lammy), சிறுவர்கள் குற்றவியல் வாழ்க்கைக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய ‘சிறுவர் நீதி வெள்ளை அறிக்கை’யை (Youth Justice White Paper)  வௌியிட்டுள்ளார்.

அண்மையில் பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சவுத்போர்ட் கத்திக்குத்துச் சம்பவம் (Southport stabbings) தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த சீர்திருத்தங்களை பல மடங்கு கடுமையானதாக மாற்ற அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம், தங்கள் பிள்ளைகள் சட்டத்தை மீறுவதைத் தடுக்கத் தவறும் பெற்றோர்களுக்குச் சிறைத்தண்டனை (Jail time) வழங்கும் புதிய விதிகள் அமல்படுத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நீதிமன்றங்கள் இளம் குற்றவாளிகளைக் கண்காணிப்பதோடு, அவர்கள் மீண்டும் குற்ற வழிகளில் ஈடுபடாமல் இருப்பதற்காக அவர்களுக்குப் பொருத்தமான ஆரோக்கியம் மற்றும் கல்வி சார்ந்த வழிகாட்டல்களையும் (Interventions) வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button