பலதும் பத்தும்

உலகின் முதல் இறகுகள் கொண்ட டைனோசர்கள்; சீனாவில் கண்டுப்பிடிப்பு!

1996-ல் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தனித்துவமான புதைபடிவத்தின் மூலம், விஞ்ஞானிகள் டைனோசர்களைப் பற்றிய தங்கள் சிந்தனை முறையை முற்றிலுமாக மாற்றியுள்ளனர்.

இந்தப் புதைபடிவம், இறகுகள் கொண்ட டைனோசருக்கான உலகின் முதல் உறுதியான சான்று என்று கூறப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்பு, சில தொல்லுயிரியலாளர்கள் பறவைகள் டைனோசர்களிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் என்று ஊகித்திருந்தனர்.

ஆனால், போதுமான சான்றுகள் இல்லாததால் இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்தது. இருப்பினும், இந்த சீனப் புதைபடிவத்தின் கண்டுபிடிப்பால், டைனோசர்களுக்கு இறகுகள் இருந்தன என்ற கருத்து தற்போது உறுதி செய்யப்பட்டது.

புகழ்பெற்ற கனடிய தொல்லுயிரியலாளர் பிலிப் கர்ரி, இந்தத் தனித்துவமான புதைபடிவத்தை ஆய்வு செய்யும் வாய்ப்பைப் பெற்ற முதல் விஞ்ஞானிகளில் ஒருவர் ஆவார். (அக்காலத்தில் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் சீனாவுக்குச் சென்று இதுபோன்ற சோதனைகளை நடத்துவது மிகவும் சவாலான பணியாக இருந்தது)

“இந்தக் கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த அறிவியல் உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. இது டைனோசர்களுக்கும் பறவைகளுக்கும் இடையிலான உறவைத் தெளிவாக உறுதிப்படுத்தியது,” என்று விஞ்ஞானி கர்ரி கூறியதாக வெளிநாட்டுச் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button