மகிந்த கொழும்பில் இருந்தவாறு நாட்டை மீட்டெடுத்தது எப்படி?; சரத் பொன்சேகா கேள்வி

யுத்தக் களத்திற்கு செல்லாமல் கொழும்பில் இருந்த மகிந்த ராஜபக்ஷவை எவ்வாறு நாட்டை மீட்டெடுத்தவர் என்று கூற முடியும் என முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்
நாட்டை மீட்ட தலைவரே மகிந்த ராஜபக்ஷ என்றும், அவரை விசாரணைகளுக்கு அழைக்கக்கூடாது என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கூறுவது தொடர்பில், மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பொன்சேகா இவ்வாறு பதில் கேள்வி எழுப்பியுள்ளார்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தக் களத்தில் மகிந்த ராஜபக்ஷ இருப்பதை நாங்கள் காணவில்லை. கோப்ரலாகவோ, படை சிப்பாயாகக்கூட இருந்ததில்லை. நாட்டை மீட்டவர்கள் என்றால் அன்று இராணுவ சீருடை அணிந்துகொண்டு இராணுவ உறுப்பினராக யுத்த களத்திற்கு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கொழும்பில் இருந்துகொண்டு சத்தமிட்டுக்கொண்டிருந்தவர்களை எவ்வாறு நாட்டை மீட்டெடுத்தவர்கள் என்று கூற முடியும். உயிர்த்தியாகம் செய்து எதிரிக்கு முகம்கொடுக்க வேண்டும் என்றார்.
![]()