ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடன் தமிழரசுக் கட்சியின் பயணம் தொடரும்; மத்திய குழுவில் தீர்மானம்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் தொடர்ந்தும் இணைந்து பயணிப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது
வவுனியாவிலுள்ள தழிழரசுக் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்தியகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செலாளரான எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில்,
இந்த கூட்டத்தில் ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டணியுடன் தொடர்ந்தும் பயணிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது. குறிப்பாக மக்களுடைய பொதுவான பிரச்சினைகள், அரசியல் தீர்வு விடயங்களில் தொடர்ச்சியாக இணைந்து பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு இணங்கி செயற்படுவதென்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன .
இதேவேளை யாழ். கலாசார மண்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலாசார மண்டபம் யாழ். மாநகர சபைக்கு கையளிக்கப்பட வேண்டும் என்றும், உள்ளூர் ஆலோசனை குழுவை அமைத்து அதனை நிர்வகிக்கும் பணியை முன்னெடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் பிரஜாசக்தி தொடர்பிலும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. அது தொடர்பில் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளிலும் குழுக்களை அமைத்து, அதனை உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் பிரசுரித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், உள்ளூராட்சி சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அந்த அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது என்றார்.
![]()