உலகம்

புயலுக்கு முந்தைய அமைதி : ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் ட்ரம்பின் பதிவால் பரபரப்பு

ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தில், கொந்தளிப்பான கடலில் பயணிக்கும் போர்க் கப்பல்களுக்கு முன்னால் நின்றுகொண்டு, ட்ரம்ப் கமராவை நோக்கி சுட்டிக்காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.

‘புயலுக்கு முந்தைய அமைதி’

அந்த வரைபடத்தில் உள்ள பல கப்பல்களில் ஈரானியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. அதனுடன் ‘புயலுக்கு முந்தைய அமைதி’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

 

மேலும், புயல் வீசும் கடல் மற்றும் இராணுவக் கப்பல்களின் பின்னணியில், ட்ரம்புக்கு அருகில் ஒரு அமெரிக்கக் கடற்படைத் தளபதி நிற்பது போலவும் அந்த வரைபடத்தில் இடம்பெற்றிருந்தது.இந்த பதிவு பேசும் பொருளாகி உள்ளது.

ஈரான் சபாநாயகரின் பதிலடி

இதற்கிடையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர், ‘எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானின் இராணுவம் தயாராக உள்ளது. அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

புயலுக்கு முந்தைய அமைதி : ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் ட்ரம்பின் பதிவால் பரபரப்பு | Calm Before The Storm Trump Shares Cryptic Post

தவறான உத்தியும் தவறான முடிவுகளும் எப்போதும் தவறான விளைவுகளுக்கே வழிவகுக்கும். இதை முழு உலகமும் ஏற்கனவே உணர்ந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button