கண்கள் – கைகள் கட்டப்பட்டு மட்டக்களப்பு கொண்டுவரப்பட்ட ஊடகவியலாளர்! ஆதாரங்களுடனான உண்மைகள்..

மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள ஒரு இரகசிய தளத்தில் இலங்கை புலனாய்வு துறையின் ஒரு குழுவான திரிப்போலி பிளட்டூனின் முஸ்லிம் படையினர் அங்கு வைத்துதான் கடத்தல்களையும் சித்திரவதைகளையும் படுகொலைகளைகளையும் செய்துள்ளனர்.
ஒருநாள் அங்கு பல சிங்கள அதிகாரிகள் வருகைதந்திருந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
திரிப்போலி பிளட்டூன் அமைப்பால் கடத்தப்பட்டு கண்கள் – கைகள் கால்கள் கட்டப்பட்டு இருட்டறையில் வைக்கப்பட்டிருந்த நபர்களுள் ஒருவர் மிக முக்கியமான புள்ளி என்று தெரியவந்தது.
குறித்த நபரை பார்த்து விசாரிப்பதற்காகதான் இராணுவ உயரதிகாரிகள் அந்த இரகசிய தளத்திற்கு வருகை தந்தார்கள்.
மெல்லிய உடல்வாகையுடைய அந்த நபர் கைகள் கால்கள் கட்டப்பட்டு ஒரு நாற்காலியில் அமரவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
மரண ஓலம் எழுப்பிய அந்த நபரை திரிப்போலி பிளட்டூனை சேர்ந்த ரிஸ்வான் என்பவர் மூன்று தடவைகள் அவரது தலையில் சுட்டுக்கொலை செய்துள்ளார்.
அந்தநபர் இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட ஆவார்.
![]()