மே 18ஆம் திகதிக்கு முதல் நாள் வவுனியாவில் நடக்கும் ஏற்க முடியாத செயல்

மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் மே மாதம் 17 ஆம் திகதி தழிழரசுக்கட்சி வவுனியாவில் மத்தியகுழுக் கூட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தமிழரசுக்கட்சி முள்ளிவாய்க்கால் நினைவு நாளை ஒரு முதன்மையாக நாளாக கருதவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
14 ஆவது ஆண்டுக்கு பின்னரும் நாம் எங்கு வந்து நிற்கின்றோம் என்பதற்கு தமிழரசுக்கட்சியின் இந்தச் செயற்பாடு ஒரு அடையாளமாக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மே 18 ஆம் திகதி வெறும் நினைவு நாளாக கடந்து செல்லாமல் ஒரு மாற்றமான நாளாக மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரும் தமிழர்களாக எங்கிருந்தாலும் தழிழினம் சந்தித்த இந்தப் பெரும் இனப் படுகொலைக்கான நீதியை நோக்கி பயணிப்பது என்பது எங்களை ஒரு வலுவான சக்தியாக மாற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()