இலங்கை

குமுதினி படுகொலையின் 41 ஆவது நினைவேந்தல் – கண்ணீரில் நனைந்த நெடுந்தீவு!

குமுதினி படுகொலையின் 41 ஆவது நினைவேந்தல், நெடுந்தீவு மண்ணில் உணர்வெழிச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள குமுதினி படுகொலை நினைவேந்தல் நினைவுத்தூவியில் நினைவேந்தல் குழுவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

1985ஆம் ஆண்டு இதே போன்ற நாளில் நெடுந்தீவு கடற்பரப்பில் நெடுந்தீவு மாவிலித்துறை முகத்தில் இருந்து யாழ் புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி கடலில் குமுதினி படகில் மக்கள் பயணித்த போது கடற்படையினரால் 07 மாத பெண் குழந்தை, பெண்கள் அடங்கலாக உட்பட 36 பேர் நடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தப் படுகொலையில் 41 ஆவது நினைவேந்நல் இன்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத் திரு வேலன் சுவாமிகள் நெடுந்தீவு பங்குத்தந்தை மத தலைவர்கள் படுகொலையில் உயிழந்தவர்களின் உறவுகள் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button