இலங்கை

குருக்கள்மடம் மனிதபுதைகுழி- ஸ்கானிங் முறைக்கு நீதிமன்று அனுமதி!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தை ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை  களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

அதன்போது குறித்த பிரதேசத்திற்கு கள விஜயத்திற்காக  சென்றிருந்தபோது அங்கு சடுதியாக மழை பெய்ததால் கள ஆய்வினை முன்னெடுக்க முடியாததால் மீண்டும் குறித்த வழக்கு  வெள்ளிக்கிழமை(15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த பகுதியை ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button