முள்ளிவாய்க்காலில் தமிழரை கண்ணீர் விட வைத்த மஹிந்த குடும்பம் இன்று கண்ணீர் விடுகின்றது

முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு செய்து தமிழ் மக்களை கண்ணீர் விட வைத்த மஹிந்த ராஜபக்ச குடும்பம் 17 வருடங்களுக்கு பின்னர் அதே மாதத்தில் கண்ணீர் விடுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினை வேந்தல் வாரத்தை முன்னிட்டு, கொட்டும் மழைக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபிக்கு முன்னால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்ததுடன் மேலும் கூறுகையில்,
2009 மே மாதம் தமிழ்மக்கள் மீது இன அழிப்பு நடைபெற்றது.இந்த மாதத்தில் மருத்துவம் உணவு இன்றி குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை பட்டினியை எதிர் நோக்கியதுடன் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டனர் . இந்த இனஅழிப்பு இடம்பெற்று 17 வருடங்களுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்
இது தமிழர்களை பொறுத்தமட்டில் இந்த மாதம் கண்ணீர் சுமந்த மாதம் தமிழர்களுக்கு அநீதி விளைவித்ததில் மகிந்த ராஜபக்சவும் ஒருவர் அதேபோன்று தமிழர்களின் இன அழிப்பில் பங்கு கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு தமிழர்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரைக்கும் நீதி விசாரணகள் மேற்கொள்ளப்பட வேண்டும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
ஆகவே இந்த மாத த்திலே தமிழர்கள் மீது மிக மோசமான இன அழிப்பை செய்தவர்களை கைது செய்வதையிட்டு தமிழர்கள் நிம்மதி அடைகின்றனர். அதேவேளை இந்த இனத்தின் மீது அநியாயம் செய்தவர்களை கைது செய்து தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க இந்த நாட்டின் தலைவர் முன்வர வேண்டும் என்றார்.
![]()