ரணில் – சஜித் இணைய இருக்கும் ஒரே ”வழி ”

ரணில் ஜனாதிபதியாக இருக்கட்டும், நான் பிரதமராக இருக்கின்றேன் என்ற ஒரு தெளிவான அறிவிப்பை சஜித் பிரேமதாச, வெளியிட்டால், பிரிந்துள்ள இரு தரப்புகளும் மிக எளிதாக ஒன்றிணைந்துவிடும் என்று ஆக்கியமாக்கல் சக்தியின் முன்னாள் எம்.பி. அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைகின்றமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்குத் தயார் எனத் தெரிவிக்கும் நிலையில், அதற்கு ஒரே ஒரு எளிய வழிமுறை மட்டுமே உள்ளது.
ரணில் ஜனாதிபதியாக இருக்கட்டும், நான் பிரதமராகச் செயல்படுகிறேன் என்ற ஒரு தெளிவான அறிவிப்பை சஜித் பிரேமதாச, வெளியிட்டால், பிரிந்துள்ள இரு தரப்புகளும் மிக எளிதாக ஒன்றிணைந்துவிடும்.
சஜித் பிரேமதாசவை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் ரணில் விக்கிரமசிங்க.இன்றும் சஜித் அவரை ”சேர் ”என்ற மரியாதையுடன் தான் அழைக்கின்றார்.இவ்வாறானதொரு நிலையில், கட்சிகள் ஒன்றிணைவதற்கு நீண்ட பேச்சுவார்த்தைகளோ அல்லது குழுக்களின் பரிந்துரைகளோ தேவையில்லை. சஜித் பிரேமதாசவின் இந்த ஒரு பிரகடனம் ஒட்டுமொத்த அரசியல் பிரிவினையையும் முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்றார்.
![]()