உலகம்

பீஜிங்கை சென்றடைந்தார் ட்ரம்ப்

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் பீஜிங் நகரை சற்றுமுன்னர் சென்றடைந்துள்ளார்.

தமது இரண்டு நாட்கள் பயணத்தின் போது, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்குடன் ட்ரம்ப் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

சுமார் ஒரு தசாப்த காலத்திற்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயமாக இது அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையிலான உறவில் இது ஒரு தீர்மானமிக்க தருணமாக பார்க்கப்படுகின்றது.

2025 ஒக்டோபர் மாதம் தென்கொரியாவின் புசான் நகரில் நடைபெற்ற ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சி ஜின்பிங் சந்தித்த பிறகு, அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் விஜயம் இதுவாகும்.

2025 ஜனவரி 20 ஆம் திகதி தமது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தைத் தொடங்கிய பின்னர் ட்ரம்ப் முதன்முறையாக சீனவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மத்திய கிழக்கு போர், உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button