இலங்கை

ராஜபக்ச அணியினர் மீண்டும் ஆட்சியில் அமரலாம் என கனவிலும் நினைக்கக் கூடாது

ஊழல் மற்றும் மோசடிகளில் சிக்கிய ராஜபக்ச அணியினர் மீண்டும் ஆட்சியில் அமரலாம் என்று கனவிலும் நினைக்கக்கூடாது என்று தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

“இந்த நாட்டின் மக்கள் கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகவே எமக்கு மிகப்பெரிய ஆணையை வழங்கியுள்ளனர்.நாட்டைச் சீரழித்தவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச அணியினர் மீள் எழுச்சி பெறப்போவதாகக் கூறி வருவதை விமர்சித்த அவர், ஊழல், மோசடி விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ்வாறான கருத்துக்களை அவர்கள் பரப்பி வருகின்றனர்.

ஆனால், சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. கடந்த காலங்களில் மக்கள் பணத்தைச் சூறையாடியவர்கள் அதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசு ஊழலற்ற, சுத்தமான அரசியல் கலாசாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தி வருகின்றது என்றும், பழைய ஊழல்வாதிகளை மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button