உலகம்

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா விடுதலை

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான தக்சின் ஷினவத்ரா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வந்த தக்சின், தனது மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருக்கு விடுதலை கிடைப்பது குறித்து அறிந்த அவரது கட்சி ஆதரவாளர்களும் சிறைக்கு முன்பாகத் திரண்டு ஆரவாரம் செய்துள்ளனர்.

76 வயதான தக்சின் ஷினவத்ரா 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பதவி வகித்தார். இவரது பதவிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும், அந்நாட்டு மன்னர் அந்த சிறைத்தண்டனையை ஒரு ஆண்டாகக் குறைத்திருந்த நிலையில், இதய நோய் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா 6 மாத காலத்தை வைத்தியசாலையில் விசேட விருந்தினர்களுக்கான அறையில் கழித்ததாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

அவரது நன்னடத்தை மற்றும் வயதைக் கருத்திற்கொண்டு அவருக்கு விடுதலை வழங்க அந்நாட்டு நீதியமைச்சு கடந்த மாதம் இணக்கம் தெரிவித்தது. அதன்படி, ஒரு வருட சிறைத்தண்டனை காலம் 8 மாதங்களாகக் குறைக்கப்பட்டு தக்சின் ஷினவத்ரா இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button