கோல்பேஸ் ‘அரகலய’ போராட்ட இளைஞர்களுக்காக நீதி கோரும் நாமல் ராஜபக்ச

கோல்பேஸ் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
மேலும் அமைப்பு மாற்றத்திற்காகப் (system change) போராடிய இளைஞர்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டுகிறார்.
குருநாகலை ஹிரியாலவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
சுகபோகங்களை அனுபவிக்கும் அரசதரப்பினர்
மேலும் வீடுகளை எரித்து ஆட்சிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தற்போது சொகுசான வாகனங்களில் வலம் வருகின்றனர்.
சொகுசு வீடுகளைக் கட்டிக்கொண்டு சுகபோகங்களில் திளைத்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் ஒன்பதாம் திகதியன்று போராட்டம் நடத்தி கும்பல் எங்கள் கட்சி உறுப்பினர்களைத் தாக்கி வீடுகளை எரித்து நாடாளுமன்ற உறுப்பினர் அதுகோரலாவை வீதியில் கொலை செய்தனர்.

தங்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதன் விளைவாக தற்போதைய அரசாங்கமும் ஆட்சி பீடம் ஏரியது.ஆனால் நேர்மையாகக் களம் இறங்கி இந்த நாட்டின் அமைப்பு மாற வேண்டும் என போராடியவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
அத்தோடு வருங்கால சந்ததியினருக்கு ஏற்றவாறு இந்த நாட்டின் அரசியல் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்று நேர்மையாகச் சிந்தித்த இளைஞர்கள் பேராசிரியர்களுக்கு அப்பட்டமான பொய்கள் கூறி ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என குறிப்பிட்டுள்ளார்.
![]()