உலகம்

9 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளேன் – ட்ரம்ப்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது போராக இதை மாற்ற விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தற்காலிக அமைதி நீண்ட காலப் போர்நிறுத்தத்துக்கான தொடக்கமாக அமையும் என்று நம்பிக்கை குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ரஷ்யாவில் கொண்டாடப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு, மே 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்குப் போர்நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தப் போரில் உக்ரைனுக்கும் முக்கியப் பங்கு இருந்ததைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், தனது நேரடி வேண்டுகோளை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button