இலங்கை

நடுக்கடலில் திடீர் கோளாறு ; யாழ்- நாகப்பட்டின கப்பல் பழுதானதால் மக்கள் அவதி

யாழ்ப்பாணம்: காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி இன்று புறப்பட்ட பயணிகள் கப்பல் இயந்திரக் கோளாறால் பழுதடைந்ததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட கப்பல், திட்டமிட்ட நேரத்தைவிட தாமதமாக இன்றிரவு 11 மணியளவில் நாகப்பட்டினத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்ட நிலையில், மீன்பிடி படகுகள் உதவியுடன் கப்பல் கரை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் பழுதுபாடால் பயணிகள் நீண்ட நேரம் கடலில் சிக்கித் தவித்ததாகவும், உணவு மற்றும் வசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button