சீமான் தோற்றது ஏன்? இலுமினாட்டிகள் தான் காரணம்(மா? )…. ஏலையா க.முருகதாசன்

தமிழ்நாட்டு மக்களின் ஆணை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் சீமானின் பொருளாதாரம் பற்றிய விபரிப்பு,அதன் அபிவிருத்தி,விஞ்ஞான அறிவு கலந்த சிந்தனை ,சுத்தமான காற்று இவை பற்றி அவர் சொல்லிக் கொண்டிருப்பதைத் தமிழக மக்கள் காது கொடுத்து கேட்டார்களா என்பதற்கான எந்தவொரு நம்பிக்கையும் நடந்து முடிந்த தேர்தலில் தெரியவில்லை.
உலகளாவிய முன்னேறிய நாடுகளில் அரசுகள் எதையெல்லாம் சிந்திக்கின்றதோ அங்கெல்லாம் பல்துறை அறிவாளிகள் தொட்டு சாதாரண மக்கள் வரை உள்வாங்குகின்ற அறிவார்ந்த விடயங்களை சீமான் மக்களுக்கு விளக்கப்படுத்தியிருந்தாரே அது தேவையற்றது சினிமா மாயை ஒன்றே போதும் விவாதிக்கவும் விவாதித்ததை அசைபோட்டுச் சிந்திப்பதை தமிழக மக்கள் தேவையற்றதாக நினைத்துவிட்டார்களோ என நினைக்கத் தோன்றுகின்றது.
நடிகர் விஜய்க்கு மனைவியாக இருக்கவும் தயார் என்றும், விஜய் தோற்றால் குடும்பத்துடன் விசம் குடித்துச் சாவோம் என்று சொல்லுமளவுக்கு தமிழகப் பெண்கள் அறிவுத் தடுமாற்றம் உள்ளவர்களா என்று சிந்திக்க வைத்தாலும்,இப்படியெல்லாம் சொல்ல வைக்கப்பட்டார்களா என்ற பார்வையிலும் சிந்திக்க வேண்டியுள்ளது.
பாரதிய ஜனதாக் கட்சிக்கும் விஜய்க்கும் தொடர்பேயில்லை என்பதும் அதிமுகவுடன் கூட்டு என்பதும் ஒரு பொய்த் தோற்றம்.

சீமான் போன்றவர்கள் தமிழகச் சட்ட சபைக்குள் நுழையக்கூடாது என்ற இலுமினாட்டிகளுடன் விஜய் ஒப்பந்தம் செய்திருக்கலாம்.இதில் வெற்றி என்ற மாலையைப் போட்டு,தமிழகத்திலிருந்து திமுகாவை முற்றாகத் துடைத்தெறிய பலிக்கடாவாக்கப்பட்டவர்தான் விஜய்.
தனது சினிமா வாழ்க்கைக்கு உறுத்தலாக இருந்து தொலைக்கதாட்சி தொடக்கம் சினிமா வரை தமது கையடக்கத் தொலைபேசி போல அவற்றைப் பயன்படுத்திய கருணாநிதிப் பரம்பரை சாம்ராஜ்யத்தை துடைத்தெறிய பேயுடனும் கூட்டு வைப்பேன் என்பது போல உறவு வைத்து வென்றிருக்கிறார் விஜய்.
விஜய்க்கு இருந்த இளைஞர்களின் சினிமா மயக்கு அலையையும் தாண்டி நடந்திருப்பதால் இதில் றோவின் நகர்வு உண்டு என்றே தோன்றுகின்றது.
றோவுக்கும் இலுமினாட்களுக்கும் இடையில் உத்தியோகபூர்வமான தொடர்பு இருப்பதற்கும் சாத்தியம் உண்டு.எல்லாவற்றையும் எடுத்தமானத்துக்கு அல்ல ஆழ்ந்து சிந்திக்கும் போது இது நேர்மை தவறிய வெற்றியா எனச் சிந்திப்பதை தவிர்க்க முடியவில்லை.
சீமானால் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியவில்லையெனில் அவர்களின் கொள்கையை ஆதரித்த தமிழக மக்கள் பொலிகளா வேசதாரிகளா?.
பிரபஞ்சத்தில் நுழைந்து கிரகமொன்றில் இறங்கி நிற்கும் ஒரு செயற்கைக் கோளை பூமிலிருந்தே பல கோடி மைல்களுக்கப்பால் மின்னியல் காற்றுக்கூடாகவும் காற்றில்லாத வெளிக்:கூடாகவும் நவீன விஞ்ஞானத்துக்கூடாக இயங்க வைக்க முடியுமெனில்,பெரும் சூறாவளியைம், நிலநடுக்கத்தையும்,சுனாமியையம் கொண்டுவரு முடியுமெனில் வாக்கு இயந்திரத்தில் அழுத்திய சின்னத்திற்குப் பதிலாக இன்னொரு சின்னத்திற்கு வாக்கையும் பதிய வைக்க முடியும் என்பதுகூட உண்மையாகலாம்.
அதை உருவாக்கிய இயந்திரவியலாளருக்கு அது நன்றாகவே தெரியும்.விஞ்ஞானக் கண்டுபிடிப்பகளில் இதற்கு மிஞ்சியது எதுவும் இல்லையென்றிருந்த இயந்திரங்களையும் விட விஞ்சிய கண்டுபிடிப்புகள் வரவில்லையா?.அத்தகு ஊழல் நடந்திருக்கவும் வாய்ப்புண்டு.தவறைக் கண்டு பிடிக்கவும் விஞ்ஞானம் உதவி செய்யும்.பிடிபடாமல் தவறு செய்யவம் விஞ்ஞானத்தில் ஏதுக்கள் உண்டு.
இனிச் சீமானின் பக்கம் என்ன தவறு என்று பார்ப்போம்.சீமான் தமிழக அரசின் சரிபிழைகளைச் சொல்லித்தான் அரசியல் செய்திருக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் பிரபாகரனையோ,விடுதலைப்புலிகளையோ முன்னிலைப்படுத்தி அரசியல் செய்திருக்கக்கூடாது.ஏனெனில் ராஜீவ் காந்தியின் கொலையில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் என்னதான் தமிழக மக்கள் தமிழரகள்; என்றாலும் ராஜீவ்காந்தியின் கொலையை செய்த விடுதலைப்புலிகளை அவர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.ஏனெனில் அவர்கள் இந்தியர்கள்.
தமிழ் நாட்டில் இருக்கும் யாராவது ஒரு தமிழரிடம் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்தது சரியா என்று கேட்டால் தவறு மிகத் தவறு என்று கோபத்துடன்தான் பதில் சொல்லுவான் இதுதான் யதார்த்தம்.
சீமான் தனது கட்சிச் சின்னமாக புலிக்கொடியை வைத்திருக்கவே கூடாது.சோழன் காலம் வேறு,இப்பொழுதுள்ள சூழ்நிலை வேறு.
சோழனின் யதார்த்த வாழ்வு வேறாகவும் இலக்கியச் சுவைக்காக அவனின் வரலாற்றைச் சுற்றி புனையப்பட்ட வர்ண வேலைப்பாடுகள் மிக்க வரலாறு வேறு.

இதைவிட சீமான் தனது கட்சியை நடத்துவதற்காகவும் விடுதலைப்புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் விதந்து புகழ்ந்துரைப்பதற்காகவும் புலம்பெயர் இலங்கைத் தமிழர் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் எனப் பரவலாக கதைக்கப்படுகின்றதே,அதுவும் றோவின் கையாட்களாக ஒற்றர்களாக ஐரோப்புhவுக்கு பலும்பெயர்ந்த தமிழர்களில் சிலரைக் கைப்பாவைகளாக மாற்றி அவர்கள் மூலமாக சீமானுக்குத் தேவையான பணம் அனுப்பப்பட்டு விடுதலைப்புலிகளை உயிர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் தமிழர்களுக்குத் தனிநாட்டைத் தவிர வேறு வழியில்லை என்ற பூதாகரச் சிந்தனையை தமிழர்கள் மத்தியில் உருவாக்கவும் சீமான் பயன்படுத்தப்படுகிறார் என்பதுடன் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகக்கூடாது என்ற திட்டமிடலும் உண்டு.
சீமானின் அறிவு போற்றத்தக்கதெனினும் தமிழகத்தில்,ஒருவனின் பரம்பரையைக் கூர்ந்து கவனித்து அலசி ஆராய்ந்து அவன் கலப்பில்லாத தமிழனா என்பதன் வழியாக தமிழகத்தை ஆள வேண்டும் என்பது எப்பொழுதுமே சாத்தியமற்றது என்பதை சீமான் உணரவே இல்லையா?.
தனித் தமிழன் என்பது தமிழகத்தில் ஒரு போதும் சாத்தியப்படாது.கன்னடம்,ஆந்திரா,கேரளம் ஆகிய மாநிலங்களில் திராவிடக் கொள்கை இல்லை.
அங்கே அவரவரின் மொழி இனம் சார்ந்த கொள்கைக்கூடாக பிரச்சாரம் செய்யப்பட்டு ஆட்சி நடக்கின்றது.
ஆனால் தமிழகம் திராவிடக் கொள்கையில் ஊறி மிகப்பலவாண்டுகளாகிவிட்டன.இதைவிட கனியன் பூங்குன்றனார் வழிமொழிந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தை மேடை தோறும் சொல்லி மகிழ்வதால்,தமிழகத்தை தமிழரல்லாதவர்களும் தமது சொந்த மாநிலம் என்று தர்க்க ரீதியாக வாதிடுவதில் தவறில்லையே.
சீமான் தோற்றதற்கு விடுதலைப்புலிகளும்,பிரபாகரனின் பெயரும்,புலிக் கொடியும்,தனித் தமிழன் என்பதும்,புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணம் வாங்குவதும்,உன்னை வெல்லப் பண்ணுகிறோம் என இலுமினாட்டி றோவை நம்பியதுந்தான் காரணம்.

ஆனால் விஜய்யின் வெற்றியில் சந்தேகம் உண்டு.இலுமினாட்டிகளின் கற்றில் பிஷ் கைகள் அனைத்துக் கண்டங்களின் மேலம் பரவிக் கொண்டிருக்கிறது என்பதையும் நிராகரிக்க முடியாது.
சீமான் தோற்றதற்கு காரணங்கள்
1.தனித் தமிழ்,
2.புலிக் கொடி (சோழனை ஞாபகப்படுத்தாமல் புலிகளை ஞாபகப்படுத்தி ருhஜிவ் காந்தியின் கொலையை ஞாபகப்படுத்தியமை.
2.பிரபாகரன் பெயர் (ராஜீவ் காந்தியின் இறப்பை நினைவுபடுத்தியமை)
3.அவரை திமுகாவை அப்புறப்படுத்த றோ பயன்படுத்தியிருக்கலாம்.
![]()