இலங்கை

நான் கேட்ட கேள்விகளைத் தவிர்த்த அமைச்சர் கேட்காத கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்

ஓய்வூதிய பயனாளர்கள் தொடர்பில் நான் சபையில் எழுப்பாத கேள்விகளுக்கு பொதுநிர்வாக அமைச்சர் பதிலளித்துள்ளார். பிரதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை அவர் தவிர்த்துள்ளார்.நேரடியாக கோரிய மூன்று பிரதான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை. என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஓய்வூதிய பயனாளர்கள் தொடர்பில் நான் சபையில் எழுப்பாத கேள்விகளுக்கு பொதுநிர்வாக அமைச்சர் பதிலளித்துள்ளார். பிரதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை அவர் தவிர்த்துள்ளார். நிலையியல் கட்டளையின் ஊடாக நேரடியாக 3கேள்விகளை அமைச்சரிடம் கேட்டிருந்தேன்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் மீதான வரியை நீக்கி அதற்கு மாற்று நடவடிக்கைகள் எடுக்க முடியுமா ? திறைசேரி ஊடாகவே ஓய்வூதிய கொடுப்பனவுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கு பதிலாக ஓய்வூதிய நிதியம் ஒன்றை உருவாக்க முடியுமா ?

சாதாரண கால சேவையில் இருந்து விட்டு பின்னர் நிரந்தர சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.சுகாதார அமைச்சில் சேவையாற்றிய பல சேவையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு தீர்வு காண குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.

இந்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button