உலகம்

போப் லியோவுடன் நேரடி சந்திப்பு; மார்கோ ரூபியோ இத்தாலி பயணம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வாடிகன் நகரத்திற்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தின் போது, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் லியோ XIV அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வாடிகன் நகரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இருவரும் பரிசுகளை பரிமாறிக்கொண்டதுடன், பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகளை பகிர்ந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் போப் லியோ இடையே அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பு, இருதரப்புகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஈரான் மீதான போரை கண்டித்த போப் லியோ, “போர் தொடுப்பவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் ஏற்க மாட்டார்” எனக் கூறியிருந்தார்.

இது அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, தன்னை இயேசு கிறிஸ்துவாக சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை டிரம்ப் வெளியிட்டது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், போப் லியோவுக்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க டிரம்ப் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

போப் லியோவுடன் நேரடி சந்திப்பு ; மார்கோ ரூபியோ இத்தாலி பயணம் | Direct Meeting With Pope Leo Marco Visits Italy

இதனிடையே, மார்கோ ரூபியோ தனது இத்தாலி பயணத்தின் போது, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி மற்றும் வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ தஜானி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அமெரிக்கா மற்றும் வாடிகன் இடையிலான அண்மைய பதற்ற சூழ்நிலையில், இந்த பயணம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button