இந்தியா

தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதன்படி, பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி விவரங்கள் தெரியத்தொடங்கியுள்ளது.

அதன்படி, பெரும்பாலான தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க ஸ்டாலினை தோற்கடித்து தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றிபெற்றுள்ளார்.

மேலும், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button