வழக்கின் தீர்ப்புகள் தொடர்பில் ஜனாதிபதியின் தலையீடு குறித்து ஆணைக்குழு என்ன செய்யப் போகிறது?

வழக்கின் தீர்ப்புகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்கூட்டியே கூறுவாராக இருந்தால் அது நீதித்துறையில் அவர்கள் தலையிடுவதாகவே அமையும் என்றும், இது தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் சட்டத்தரணி மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அடுத்த மாதத்தின் வழக்குத் தீர்ப்பை ஜனாதிபதியினால் இப்போதே எவ்வாறு கூற முடியும். சட்டத்தரணியாக எங்களுக்கும் எதிர்வுகூற முடியாது. ஆனால் ஜனாதிபதி இவ்வாறு கூறுவாராக இருந்தால் அவர் நீதித்துறையில் தலையிடுவதையே செய்கின்றார். சாதாரண நபரொருவர் இவ்வாறு கூறியிருந்தால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் வழக்குத் தொடர வேண்டும். ஆனால் ஜனாதிபதி கூறியதால் அவருக்கு வழக்கு தொடர முடியாது என்றாலும் நீதிச் சேவை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியாவது இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என்பதனை கூற வேண்டும் என்றார்.
![]()