உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் புதிய திருப்பம்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மகரகமவில் NPP கொழும்பு மாவட்ட மே தினப் பேரணி இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அதிகாரி ஒருவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் அது தொடர்பான வழக்குகளில் அரசாங்கம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சில குற்றங்கள் குறித்தும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதோடு இந்தச் சம்பவங்களை முழுமையாக விசாரிக்கக் காலம் எடுக்கும் எனவும் ஆனால் நாங்கள் அதைச் செய்வோம் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மேலும், பத்து ஊழல் வழக்குகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புடைய ஐந்து குற்றவியல் வழக்குகள் உட்பட 15 முக்கிய வழக்குகள் இந்த மாதம் நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()