செம்மணிப் புதைகுழியில் இரு சிறுவர்களது உட்பட 3 எலும்புக் கூடுகள் சிக்கின!

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களுடையது என கருதப்படுகின்ற என்புக் கூட்டுத் தொகுதிகளுடன் மொத்தமாக மூன்று மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அகழ்வு பணிகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிதாக மூன்று மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை 244 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 240 மனித என்பு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.
அடையாளம் காணப்பட்ட என்புக் கூட்டுத் தொகுதிகளில் இரண்டு என்புக் கூட்டுத் கூட்டு தொகுதிகள் சிறுவர்களுடையது என கருதப்படுகின்றது.
மேலும் 235 வது என இலக்கமிடப்பட்ட என்புக் கூட்டுத் தொகுதி இடுப்பு பகுதிக்கு கீழே அழிவடைந்ததாக காணப்படுகிறது. அவை முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டாலே அவை சம்பந்தமான தகவல்களை சொல்லக் கூடியதாக இருக்கும் – என்றார்.
![]()