தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் இன்று தொடர் போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொது மக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் இன்று வியாழக்கிழமையும், பெளர்ணமி நாளான நாளை வெள்ளிக்கிழமையும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடாத்தப்படவுள்ளது.
இன்று வியாழக்கிழமை மாலை 4 மணி தொடக்கம் தொடக்கம் மாலை 6 மணி வரையும், பெளர்ணமி நாளான நாளை வெள்ளிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை, இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
![]()