இலங்கை

25 வருடங்களுக்கு மேலாக நாச்சிமார் ஆலயப் பகுதியில் தங்கியிருந்த இராணுவத்தினர் திடீரென வெளியேற்றம் !

யாழ்ப்பாணம், வடமராட்சிப் கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தில் தங்கியிருந்த இராணுவத்தின் திடீரென அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நாச்சிமார் ஆலயப் பகுதியைக் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்த நிலையில் நேற்றையதினம் அங்கிருந்து வெளியெறியுள்ளனர்.

இராணுவத்தினர் வெளியேறியதைத் தொடர்ந்து ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடவும் ஆரம்பித்துள்ளனர்.

ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து அழித்துவிட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவம் வெளியேறியதை உத்தியோக பூர்வமாக அறிவிக்காத நிலையிலேயே திடீரென அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *