இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம்!; உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏ.ஜி. பேரறிவாளன்,  (ஏப்ரல் 27) சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் முறைப்படி வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

1991 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து, மே 18, 2022 அன்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி விடுதலையானார்.

31 ஆண்டுகள் சிறைவாசம்

சிறைவாசத்தின் போது சட்டப் படிப்பை முடித்த பேரறிவாளன், விடுதலையான பின்னர் தனது சட்டத் துறைக் பயணத்தை தொடர்ந்து, தற்போது வழக்கறிஞராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக சட்டப் போராட்டத்திற்காக அடிக்கடி சென்ற அதே சென்னை உயர்நீதிமன்றத்தில், இப்போது வழக்கறிஞராக அவர் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *